TIRUVANNAMALAI
SRI DHANDAPANI ASHRAMAM
230 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட ஆஸ்ரமம்
அன்பே சிவம்! சிவமே சகலமும் !!
கன்னி ராசி அன்பர்களே, தங்களின் ராசிக்கு 7-ஆம் இடத்திற்கு
பொன்னவன் குருபகவான் வருகிறார். குருபகவானின் பலத்தாலும்,
பார்வையினாலும் நன்மைகள் பல பெறப்போகிறீர்கள். இதுவரை இருந்த
துன்பங்கள் நீங்கும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கும். தன லாபம்,
பொன்பொருள் சேர்க்கை ஏற்படும். இழுபறியில் இருந்த திருமணம்
கைகூடும். இருப்பினும் காதல் திருமணம் செய்பவர்களுக்கு
ஒராண்டிற்குப்பிறகு பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. கவனத்துடன்
இருக்கவும். மற்றப்படி கணவன்- மனைவி ஒற்றுமை, ஏற்படும்.
கூட்டு தொழில் நல்ல முன்னேற்றம், நண்பர்களினால் நன்மைகள்,
கணவன் (அ) மனைவியினால் நன்மைகள் போன்றவை ஏற்படும்.
துலாம் ராசி அன்பர்களே, தங்களின் ராசிக்கு 6 - ஆம் இடமான
நோய் நொடி, பகை, கடன் ஸ்தானத்திற்கு வரும் குருபகவானால்
சொல்ல முடியாத அளவிற்கு கஷ்டங்களை பெறப்போவதை நினைத்தால்
என் மனதிற்கே கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஏற்கனவே அர்த்தாஷ்டம
சனி பகவான் ஒருபுறமும், ஜென்ம கேது - கண்டக ராகு பகவான்கள்
மறுபுறமும் தங்களை சோதிக்கும் இவ்வேளையில் குருவின் பலத்தை
தாங்கள் இழப்பது மிகவும் வேதனையே. ஒருவருட காலகட்டத்தை
தாங்கள் தள்ளுவது மிககடினமாகும். எவ்வகையில் துன்பம் வரும் என்று
கணிப்பதே கடினம். எனவே எதிலும் பொருமை, ஜாக்கிரதை தேவை.
இறைவழிபாடும், கிரக வழிபாடும், தாங்கள் செய்த தானதருமங்களும்
தான் உங்களை காப்பாற்றும். மனதில் தைரியத்தை மட்டும் விட்டு
விடாதீர்கள். இதுவும் கடந்து போகும் என நினையுங்கள்.
50% - நற்பலன்கள்
50% - தீய பலன்கள்
80% - நற்பலன்கள்
20% - தீய பலன்கள்
15% - நற்பலன்கள்
85% - தீய பலன்கள்
விருட்சிக ராசி அன்பர்களே, பொன்னவன் தேவகுரு அதிர்ஷ்டம்,
புண்ணியம் எனும் 5 -ஆம் இடத்தில் சஞ்சரிக்க வருகிறார்... அவரை சிவப்பு
கம்பளம் போட்டு மேளதாளத்துடன் வரவேற்க தயாராகுங்கள்...
12-ராசிகளில் உச்ச நற்பலன்களை அடையப்போவது நீங்களே ...
ஜாக்பாக்ட் உங்களுக்கே. எதை செய்தாலும் வெற்றிமேல் வெற்றிதான்.
தைரியம், முயற்சி ஸ்தானத்தில் ஏற்கனவே ஸ்ரீ சனி பகவான் இருக்கிறார்.
தைரிய லட்சுமியுடன் மற்ற ஏழு லட்சுமிகளின் அருளாசி உங்களுக்கு
உண்டு... ஜாதகப்படி தசா புத்தி மட்டும் சிறப்பாக இருந்துவிட்டால்,
சொல்லவா வேண்டும்... நீங்கள் சாதனை நயாகர்களே ... உங்கள் ராசிக்கு
இப்படிப்பட்ட மிகசிறப்பான கிரக சஞ்சாரம் உங்கள் வாழ்வில் இனிவருமா?
சிலருக்கு குபேர யோகம் உட்பட யோகங்கள் அமையும் நேரமிது...
எந்த வாய்ப்பையும் முயற்சி செய்யாமல் விட்டு விடாதீர்கள்... மலையே
ஆனாலும் தூக்கிட முயற்சி செய்யுங்கள்... வெற்றிகள் பல உங்களை
தேடி வந்தாலும் மனதில் பணிவை நிறுத்தினால்தான் அவை நிலையான
வெற்றியாக அமையும்... இல்லை எனில் இதுவும் கடந்து போகும்.
உ
மகர ராசி அன்பர்களே, தங்களின் ராசிக்கு 3-ஆம் இடத்தில் குருபகவான்
சஞ்சரிப்பது நல்லது அல்ல... ஏற்கனவே ஜென்ம சனி, அர்த்தாஷ்டம ராகு
மற்றும் தொழில், ஜீவனத்தில் உள்ள கேது பகவான்களின் தீய பிடியில்
இருக்கும் உங்களுக்கு ஸ்ரீ குரு பகவானின் பலம் குறைவது மேலும்
துன்பங்கள் அதிகரிக்கும். எல்லாவகையிலும் சோதனைகள் வரும்.
எதிலும் தடை, தோல்வி வரும். தினம் ஒரு பிரச்சினை உங்களை துறத்தும்...
நோய் நொடிகளின் தொல்லை அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள்,
நண்பர்கள் துரோகம் செய்வார்கள். கூட்டுத்தொழிலில் பிரச்சினை
ஏற்படும். தன இழப்பு, கடன் தொல்லை அதிகரிக்கும். வரும் ஒன்றரை வருட
காலக்கட்டங்களில் நிம்மதி என்றால் ? என்ன என கேட்கும் அளவிற்கு
இருக்கும். இறைவழிபாடும், கிரக வழிபாடும், தாங்கள் செய்த
தானதருமங்களும்தான் உங்களை காப்பாற்றும்... "எதுவும் கடந்து போகும்"
என நினைத்து தைரியமாக இருங்கள். அந்த தைரியத்தை
குரு பகவான் நிச்சயம் தருவார்.
மேஷ ராசி அன்பர்களே, தங்களின் ராசிக்கு விரைய ஸ்தனாமான
12-ல் தனக்காரகன் சஞ்சரிப்பதும்,ஜென்ம ராகு , 7-ல் கேது, மற்றும்
10-ல் உள்ள சனி பகவான்களின் சஞ்சாரமும் தீமைகளை தருவதாகவே
அமைந்துள்ளது. சொல்ல முடியாத அளவிற்கு கஷ்டங்களை
பெறப்போவதை நினைத்தால் என் மனதிற்கே கஷ்டமாகத்தான்
இருக்கிறது. எனவே எதிலும் பொருமை, ஜாக்கிரதை தேவை.
நோய் நொடிகளால் தொல்லை, வீட்டில் பெரியோர்களை இழப்பது
போன்ற வேண்டாத பலன்கள் ஏற்படும். சிலருக்கு தீர்த்த யாத்திரையால்
இறைவழிபாடும் அமையும். இறைவழிபாடும், கிரக வழிபாடும்,
தாங்கள் செய்த தானதருமங்களும்தான் உங்களை காப்பாற்றும்.
மனதில் தைரியத்தை மட்டும்விட்டு விடாதீர்கள். இதுவும் கடந்து போகும்
என நினையுங்கள்.
65% - நற்பலன்கள்
35% - தீய பலன்கள்
அன்பிற்கினிய ஆன்மிக அன்பர்களே...
வணக்கம்.
வரும்14-04-2022, வியாழக்கிழமை அன்று
அதிகாலை 4.16 மணியளவில் ஸ்ரீ குரு பகவான்
தனது சொந்த வீடான" மீன ராசி "க்கு
செல்கிறார். மீன ராசியில் ஆட்சி பெற்ற
நிலையில் சுமார் ஒரு வருடம் சஞ்சாரம்
செய்து உலக உயிரினங்களுக்கு நன்மை
தீமைகளை செய்யவிருக்கிறார்.
75% - நற்பலன்கள்
25% - தீய பலன்கள்
ஸ்ரீ ஆதித்யாயச சோமாய மங்களாய புதயச
குரு சுக்ரசனிப்பயச்ச ராஹவே கேதவே நம :
சிம்ம ராசி அன்பர்களே, தங்களின் ராசிக்கு அஷ்டமம் எனும் 8 - ஆம்
இடத்திற்கு வரும் குரு பகவானால் சிறிதளவு தடைகளையும்,
துன்பங்களையும் பெற இருக்கிறீர்கள். உடலில் சோர்வு, நோய்களின்
தாக்கம் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். பணப்பற்றாகுறை
ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். அதனால் நன்மையே.
கவலை வேண்டாம் சனி, கேது பகவான்களின் சிறப்பான சஞ்சாரத்தால்
எதையும் சமாளித்து விடுவீர்கள்.
ஸ்ரீ குரு பெயர்ச்சி பலன்கள்
கும்ப ராசி அன்பர்களே, ஸ்ரீ குரு பகவான் தங்களின் ராசிக்கு 2 - ஆம்
இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு வந்து குருபலத்தை
தருவதால் நன்மைகளையே தரும். ஏழரை ஆண்டு சனிபகவானின்
துன்பங்களை குறைக்கும். தனம், பொன்பொருள் பெருகும். வெற்றி
வாய்ப்புகள், தெய்வ தரிசனம், குடும்பத்தில் மகிழ்ச்சியும் நல்ல
நிகழ்வுகளும் ஏற்படும். கோர்ட்டு கேஸ்களில் வெற்றி, கடன் அடைபடுதல்
ஏற்படும். நீண்ட காலமாக இருந்த நோய்நொடி விலகும். தைரிய
ஸ்தானத்தில் இருக்கும் ராகு பகவான் அறிய காரியங்களில் ஈடுபட
வைத்து சாதனை செய்ய வைப்பார்... இப்படி நற்பலன்களை அடைந்தாலும்
ஏழரை ஆண்டு சனிபகவானின் தொல்லைகள் சில அவ்வபோது இருக்கும்.
இறை வழிபாடுடன் கிரக வழிபாடு செய்தால் இத்தொல்லைகளும்
குறையும்..
70% - நற்பலன்கள்
30% - தீய பலன்கள்
55% - நற்பலன்கள்
45% - தீய பலன்கள்
20% - நற்பலன்கள்
80% - தீய பலன்கள்
55% - நற்பலன்கள்
45% - தீய பலன்கள்
15% - நற்பலன்கள்
85% - தீய பலன்கள்
கடக ராசி அன்பர்களே, தங்களின் ராசிக்கு9-ஆம் இடத்திற்கு வரும்
தேவகுருவால் இதுவரை இருந்த துன்பங்கள் நீங்கும். அவரின்
பலத்தாலும், பார்வையினாலும் பல நன்மைகள் தங்களுக்கு
குருபகவான் தரவிருக்கிறார். பொன்பொருள் சேரும். தன லாபம்,
தொழிலில் வெற்றி, குடும்பத்தில் சந்தோஷம், திருமணம் கைகூடுதல்,
புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, ஊதிய உயர்வு,
கடன் அடைபடுதல் போன்ற நற்பலன்கள் ஏற்படும். தந்தை வகையில்
நன்மைகள் கிடைக்கும். தெய்வ அருள் கிடைக்கும். இருப்பினும் சில
நேரங்களில் தேவையில்லாத பயம், குழப்பம் வரும். இதற்கு காரணம்
சனி, ராகு - கேது பகவான்களின் சஞ்சாரம் தங்களுக்கு தீமை
தரக்கூடியதாக அமைந்திருப்பதே.இறைவழிபாடும் கிரக வழிபாடும்
தங்களுக்கு தொடர்ந்து தேவை.
தனுசு ராசி அன்பர்களே, தங்களின் ராசிக்கு 4-ஆம் இடமான
சுகஸ்தானத்திற்கு தங்களின் ராசிநாதன் தேவகுருவான பிரகஸ்பதி
பகவான் ஆட்சி பெற்ற நிலையில் வருவது தீமைகளை குறைக்கும்.
ஏழரையாண்டு சனிபகவானின் பிடியும் தளர்வதால் ஓரளவு
நன்மைகளையும் தரும். இதுவரை இருந்த துன்பங்கள் படிப்படியாக
குறையும். நன்மைகளும் படிப்படியாக அதிகரிக்கும். அனைத்து
விஷயத்திலும் இனி முன்னேற்றம் காண்பீர்கள். இலாபத்தில் உள்ள
கேது பகவானால் தெய்வ தரிசனம், ஆன்மிகத்தால் நன்மை,
ஆன்மிகவாதிகளால் நன்மை கிடைக்கும்.
மீன ராசி அன்பர்களே, தங்களின் ராசிக்கு அதிபதியான தேவகுரு
தங்களின் ராசியிலேயே ஆட்சி பலம் பெறுவது பல வகையில் சிறப்புதான்
என்றாலும் மன குழப்பங்களுக்கு இது வழிவகுக்கும். ஏற்கனவே
இரண்டில் உள்ள ராகு, அஷ்டமத்தில் உள்ள கேது பகவான்களால்
வாழ்வில் போராட வேண்டி இருக்கும். கவலை வேண்டாம் இலாபத்தில்
உள்ள சனிபகவான் அப்போராட்டத்தில் நிச்சயம் வெற்றியை தருவார்.
இரவு, பகல் கொண்டதுதான் வாழ்க்கை என்ற எண்ணத்தில் நீங்கள்
இருந்தால் இந்த போராட்டங்கள் ஒரு பொருட்டே இல்லை. இருப்பினும்
குரு பகவான் உங்களின் ராசிப்படி உங்களின் மனைவி, குழந்தைகள்,
தந்தைக்கு நல்லதே செய்வார்.
60% - நற்பலன்கள்
40% - தீய பலன்கள்
90% - நற்பலன்கள்
10% - தீய பலன்கள்
பெறப்போகும் பலன்கள் எப்படிஇருந்தாலும் ஸ்ரீ குரு பெயர்ச்சி மஹாயாக பூஜையில் பங்கேற்று பரிகாரஅர்ச்சனை செய்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்... மேலும் சித்தர்களின் " தெய்வீக ரசமணி "களை
அணிவதன் மூலம் கிரகங்களின் தீய பலன்களை குறைத்தும்,
நன்மைகளையும் அதிகம் பெறவும் முடியும். " தெய்வீக ரசமணி " பற்றி
இந்த இணையதளத்தில் விரிவாக தந்துள்ளோம்.
மிதுன ராசி அன்பர்களே, தங்களின் ராசிக்கு 10 -ஆம் இடத்திற்கு வரும்
குருபகவானால் தங்களுக்கு சோதனை காலமே. செய்தொழிலில்
நஷ்டம், பதவி இழப்பு, தன நஷ்டம், குடும்பத்தில் பிரச்சனை, உடலில்
சோர்வு, வீண் அலைச்சல், நோய்நொடிகளின் தொல்லை, தொல்வி,
பொன்பொருள் இழப்பு போன்ற பலன்கள் ஏற்படும். ஏற்கனவே
அஷ்டம சனிபகவானின் பிடியில் இருப்பதையும் மறாவாதீர்...
எனவே எதிலும் பொருமை, ஜாக்கிரதை தேவை. கவலை வேண்டாம்
ஸ்ரீ ராகு - கேது பகவான்களின் சஞ்சாரம் துன்பங்களை குறைக்கும்.
இறைவழிபாடும் கிரக வழிபாடும் தங்களுக்கு தொடர்ந்து தேவை.
ரிஷப ராசி அன்பர்களே, பொன்னவன் தேவகுரு இலாபம் எனும் 11 -ஆம்
இடத்தில் சஞ்சரிக்க போகிறார்... அவரை சிவப்பு கம்பளம் போட்டு
மேளதாளத்துடன் வரவேற்க தயாராகுங்கள்... இறைவனை வணங்கி
துணிவுடன் எதை செய்தாலும் வெற்றிமேல் வெற்றிதான். பொன்பொருள்
சேரும். தன லாபம், தொழிலில் வெற்றி, குடும்பத்தில் சந்தோஷம்,
திருமணம் கைகூடுதல், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு, பதவி உயர்வு,
ஊதிய உயர்வு, கடன் அடைபடுதல் போன்ற நற்பலன்கள் ஏற்படும்.
ஜாதகப்படி தசா புத்தி மட்டும் சிறப்பாக இருந்துவிட்டால், யோகங்கள்
அமையும் நேரமிது... எந்த வாய்ப்பையும் முயற்சி செய்யாமல்
விட்டு விடாதீர்கள்... வெற்றிகள் பல உங்களுக்கு வந்தாலும் மனதில்
பணிவை நிறுத்தினால் தான் அவை நிலையான வெற்றியாக அமையும்...
இல்லை எனில் இதுவும் கடந்து போகும்.
தொகுப்பு :
சித்தர் மகன். Dr.L.சீனிவாசன்
செயலாளர்
ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைசித்தர் அறக்கட்டளை,
திருவண்ணாமலை.