TIRUVANNAMALAI

SRI DHANDAPANI          ASHRAMAM

230 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட ஆஸ்ரமம்

அன்பே சிவம்! சிவமே சகலமும் !!

கீழ்காணும் இ - படிவத்தில் ஒரு நபர் முதல் 5-நபர்கள் வரை 

கட்டணமில்லா அர்ச்சனை & பிரசாதத்திற்கு பதிவு செய்து கொள்ளலாம்.

மஹாயாக பூஜைக்கு நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள்

9894803009 என்ற அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளலாம்...  

ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை நடத்தும்...

12 - வது ஸ்ரீ சனிபெயர்ச்சி மஹாயாகம்

சிவப்பு நிறத்தில் * குறிப்பிடப்பட்டுள்ள  இடங்களை   கட்டாயம் பதிவு

செய்தால் மட்டுமே இறுதியில் உள்ள " Submit "பட்டன் கறுமை

நிறத்தில் மாறி இயங்கும். தாங்கள் சரியாக பதிவு செய்ததற்கு

அறிகுறியாக " பதிவு செய்ததற்கு நன்றி " என்ற வாசகத்துடன் கூடிய இணையதள பக்கம் தோன்றும்.

சிவப்பு நிறத்தில் * குறிப்பிடப்பட்டுள்ள  இடங்களை   கட்டாயம் பதிவு

செய்தால் மட்டுமே இறுதியில் உள்ள " Submit "பட்டன் கறுமை

நிறத்தில் மாறி இயங்கும். தாங்கள் சரியாக பதிவு செய்ததற்கு

அறிகுறியாக " பதிவு செய்ததற்கு நன்றி " என்ற வாசகத்துடன் கூடிய இணையதள பக்கம் தோன்றும்.

அன்பிற்கினிய ஆன்மிக அன்பர்களே... வணக்கம்.
 
   வாக்கிய பஞ்சாங்கம்படியும், திருநள்ளாரு ஸ்ரீ சனி பகவான் திருக்கோயில் தேவஸ்தானம் வழிக்காட்டுதல் படியும் நிகழும் விச்வாவசு வருடம் மாசி மாதம் 22-ஆம் நாள், ( 06-03-2026 ) வெள்ளிக்கிழமை காலை 8.26  மணியளவில் கும்ப ராசியிலிருந்து பெயர்ச்சியாகி குருபகவானின் வீடான
  " மீன ராசி "க்கு  ஸ்ரீ சனி பகவான் செல்கிறார். அங்கு சுமார் இரண்டரை வருடங்கள் சஞ்சாரம் செய்து  உலக மக்களுக்கு நன்மை, தீமைகளை செய்யவிருக்கிறார்.


 இதனை கருத்தில் கொண்டு திருமணம், கல்வி, தொழில், வேலை வாய்ப்பு, புத்திரம், ஆரோக்கியம் போன்றவற்றில் தடைகளையும், கிரக தோஷங்களால் துன்பம் அனுபவிப்பவர்களின் குறைகள் நீங்கி நிம்மதி ஏற்பட சித்தர்கள் வாழும் ஞானபூமி, " தென்கைலாயம் " என்றழைக்கப்படும் பஞ்சபூத ஸ்தலங்களில் " நெருப்பு " ( யாகம் ) ஸ்தலமான நினைக்க முக்தி தரும் திருஅண்ணாமலை மலைச்சாரலில், மலைஏறும் வழியில் அமைந்துள்ள 230 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமத்தில், ஆஸ்ரம பீடாதிபதி பிரம்மரிஷி. வாலைச்சித்தர் ஐயாவின் திருவுளப்படி " ஸ்ரீ சனிபெயர்ச்சி பூஜை " மிகசிறப்பாக நடைபெற உள்ளது.


  அருள்மிகு. திருஅண்ணாமலையாரே சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகளுக்கெல்லாம் குருவாகவும் இருக்கிறார்யாக பூஜைகளில் அக்னியே பிரதானமாக விளங்குவதால் அக்னி ஸ்தலமான இந்த அருணாச்சலத்தில் செய்யும் யாக பூஜைகள், ஹோம பூஜைகள் முழுபலனை தரும்.  ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளையானது இறைவன் அருளால்

27 ஆண்டுகளில் உலக நன்மைக்காக 110 பல்வேறு மஹாயாக பூஜைகளை மிக சிறப்பாக தொடர்ந்து செய்துள்ளது.


  ஸ்ரீ சனிபெயர்ச்சி தினமன்று, 06-03-2026 வெள்ளிக்கிழமை காலை
6.00 மணியளவில் முதலில் ஸ்ரீ மகாகணபதி ஹோமம் தொடங்கி
ஸ்ரீ சுப்ரமணியர் ஹோமம்
, ஸ்ரீ அண்ணாமலையார் - உண்ணாமலை அம்மன் ஹோமம், ஸ்ரீ சுதர்சன ஹொமம்,  ஸ்ரீ குபேர லட்சுமி ஹோமம், 

ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ சரபேஸ்வரர் - பிரத்தியங்கிரா ஹோமம்,
ஹோமம் நடைபெறும்.   இதனை தொடர்ந்து ஸ்ரீ சனிபகவானின் அதிதேவதையான ஸ்ரீ தர்மசாஸ்தா ஹோமமும்சனிபகாவானின் குருவான ஸ்ரீ காலபைரவர் ஹோமமும் நடைபெறும். பின் நட்சத்திர ஹோமம், ஸ்ரீ நவக்கிரக ஹோமமும் நடைபெறும். அதனை தொடர்ந்து மஹா பூர்ணாஹீதி நடைபெறும்மேற்காணும் பூஜையில் அர்ச்சனை செய்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை. கீழே தரப்பட்டுள்ள இ-படிவத்தின் ( E-Form )  மூலம் பதிவு செய்பவர்களுக்கு பூஜை பிரசாதம் ( விபூதி, குங்குமம் மட்டும் ) இலவசமாக அரசுதபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்...  5 - நபர்கள் வரை அர்ச்சனைக்கு பதிவு செய்து கொள்ளலாம்


அன்புடன்,

சித்தர் மகன்.

Dr. L. சீனிவாசன். M.A., D.A., S.M.P.,

செயலாளர்,
ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை,
திருவண்ணாமலை
. 606 601.


  - படிவம் ( E-Form   )  

கட்டணமில்லா அர்ச்சனை & பிரசாதத்திற்கு கீழே தப்பட்டுள்ள

இ-படிவம்  (  E-FORM  ) மூலம் விண்ணப்பிக்கலாம்...