TIRUVANNAMALAI

SRI DHANDAPANI          ASHRAMAM

230 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட ஆஸ்ரமம்

அன்பே சிவம்! சிவமே சகலமும் !!

( வெள்ளி விழா ஆண்டு )

சிவப்பு நிறத்தில் * குறிப்பிடப்பட்டுள்ள  இடங்களை   கட்டாயம் பதிவு

செய்தால் மட்டுமே மேலே உள்ள " Submit "பட்டன் கறுமை

நிறத்தில் மாறி இயங்கும். தாங்கள் சரியாக பதிவு செய்ததற்கு

அறிகுறியாக " பதிவு செய்ததற்கு நன்றி " என்ற வாசகத்துடன் கூடிய இணையதள பக்கம் தோன்றும்.

திருவண்ணாமலை

ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர்அறக்கட்டளை

நடத்தும்

சிவப்பு நிறத்தில் * குறிப்பிடப்பட்டுள்ள  இடங்களை   கட்டாயம் பதிவு

செய்தால் மட்டுமே இறுதியில் உள்ள " Submit "பட்டன் கறுமை

நிறத்தில் மாறி இயங்கும். தாங்கள் சரியாக பதிவு செய்ததற்கு

அறிகுறியாக " பதிவு செய்ததற்கு நன்றி " என்ற வாசகத்துடன் கூடிய இணையதள பக்கம் தோன்றும்.

அன்பிற்கினிய ஆன்மிக அன்பர்களே... வணக்கம்.


 
 
" ஸ்ரீ குரு பகவான் " என்று போற்றப்படுபவரான கிரக நிலையில்
இருக்கும்
" ஸ்ரீ தேவகுரு பிரகஸ்பதி "நிகழும் விச்வாவசு வருடம் புரட்டாசி மாதம் 22-ஆம் நாள், 08-10-2025 புதன் கிழமை மாலை 6.49 மணியளவில் மிதுன ராசியிலிருந்து அதிசார பெயர்ச்சியாகி தன் உச்ச வீடான  " கடக ராசி "க்கு செல்கிறார். அங்கு " உச்ச பலத்துடன்  "சுமார்

40 நாட்கள் சஞ்சாரம் செய்தும், பின் 18-11-2025 முதல் வக்ர கதியில் பின்னோக்கி சஞ்சாரம் செய்து   ( உச்ச கிரகம் வக்ரம் அடையும் போது தன் பலத்தை இழந்து நீச்ச நிலையை அடையும் )  மீண்டும் 21-12-2025 அன்று 

" மிதுன ராசி "க்கே வருகிறார். குரு பகவானின் இந்த உச்சம் & நீச்சம் சஞ்சாரமானது மிக மிக முக்கியமாக கருதப்படுகிறது...  உச்சம் & நீச்சம் என இரு வேறுபட்ட நிலையில் மாறி மாறி சஞ்சரித்து  உலகளவில் மக்களுக்கு எதிர்பாராத அளவில் பல நன்மை தீமைகளை " ஸ்ரீ குரு பகவான் " செய்யவிருக்கிறார் ... குப்பை மேட்டில் உள்ளவர்களை கோபுரத்தின் உச்சியிலும், கோபுரத்தின் உச்சியில் உள்ளவர்களை குப்பை மேட்டிற்கும் மாற்றுவார்... 


  நவக்கிரகங்களில் " ஸ்ரீ குரு பகவான் "சுபக்கிரகம் ஆவார். வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான " தனம் "எனும் செல்வத்தை தருபவர்திருமணம், கல்வி, மாங்கல்யம், குழந்தை பாக்கியம், அறிவாற்றல், பொன் போன்றவற்றை தருபவர் " ஸ்ரீ குரு பகவானே ".  இதனை கருத்தில் கொண்டு திருமணம், கல்வி, தொழில், வேலை வாய்ப்பு, புத்திரம், ஆரோக்கியம் போன்றவற்றில் தடைகளையும், கிரக தோஷங்களால் துன்பம் அனுபவிப்பவர்களின் குறைகள் நீங்கி நிம்மதி ஏற்பட சித்தர்கள் வாழும் ஞானபூமி, " தென்கைலாயம் " என்றழைக்கப்படும் பஞ்சபூத ஸ்தலங்களில் " நெருப்பு " ( யாகம் ) ஸ்தலமான நினைக்க முக்தி தரும் திருஅண்ணாமலை மலைச்சாரலில், மலைஏறும் வழியில் அமைந்துள்ள 230 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமத்தில், ஆஸ்ரம பீடாதிபதி பிரம்மரிஷி. வாலைச்சித்தர் ஐயாவின் திருவுளப்படி " ஸ்ரீ குரு பகவான் அதிசார பெயர்ச்சி பூஜை " மிகசிறப்பாக நடைபெற உள்ளது.


  அருள்மிகு. திருஅண்ணாமலையாரே சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகளுக்கெல்லாம் குருவாகவும், ஸ்ரீ குரு தட்ணாமூர்த்தியாகவும் இருக்கிறார். யாக பூஜைகளில் அக்னியே பிரதானமாக விளங்குவதால் அக்னி ஸ்தலமான இந்த அருணாச்சலத்தில் செய்யும் யாக பூஜைகள், ஹோம பூஜைகள் முழுபலனை தரும்.  ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளையானது இறைவன் அருளால்

25 ஆண்டுகளில் உலக நன்மைக்காக 109 பல்வேறு மஹாயாக பூஜைகளை மிக சிறப்பாக தொடர்ந்து செய்துள்ளது.


  ஸ்ரீ குரு அதிசார பெயர்ச்சி அன்று 08-10-2025, புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் முதலில் ஸ்ரீ செல்வகணபதி ஹோமம் தொடங்கி
ஸ்ரீ சுப்ரமணியர் ஹோமம்
, ஸ்ரீ அண்ணாமலையார் - உண்ணாமலை அம்மன் ஹோமம் நடைபெறும்.   இதனை தொடர்ந்து ஸ்ரீ நவக்கிரக ஹோமத்துடன்  மேதா தட்சிணாமூர்த்தி ஹோமமும் அதனை தொடர்ந்து பூர்ணாஹீதியும் நடைபெறும்மேற்காணும் பூஜையில் அர்ச்சனை செய்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை. கீழே தரப்பட்டுள்ள இ-படிவத்தின் ( E-Form )  மூலம் பதிவு செய்பவர்களுக்கு பூஜை பிரசாதம்
( விபூதி, குங்குமம் மட்டும் ) இலவசமாக அரசுதபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்...  5 - நபர்கள் வரை அர்ச்சனைக்கு பதிவு செய்து கொள்ளலாம்

அன்புடன்,

சித்தர் மகன்.

Dr. L. சீனிவாசன். M.A., D.A., S.M.P.,

செயலாளர்,
ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை,
திருவண்ணாமலை
. 606 601.












( கட்டணமில்லா அர்ச்சனை & பிரசாதம் )

கீழ்காணும் இ - படிவத்தில் ஒரு நபர் முதல் 5-நபர்கள் வரை

( இலவச அர்ச்சனைக்கு ) பதிவு செய்து கொள்ளலாம்

ஸ்ரீ குரு பகவான் அதிசார பெயர்ச்சி   ஹோமம் & சிறப்பு பூஜை அர்ச்சனைக்கு  இங்கு பதிவு செய்துகொள்ளலாம்.     

சிறப்பு பூஜையில் ( கட்டணம் இல்லை )

அர்ச்சனையுடன் & பிரசாதம் பெற இப்பக்கத்தின் இறுதியில்
இ-பதிவு படிவம் 
( E-Form) தனித்தனியே  தரப்பட்டுள்ளது.

நாள் : 08-10-2025, புதன் கிழமை

நேரம் : மாலை 4.00 மணி

இடம் : ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமம்,
மலை ஏறும் வழி
, திருவண்ணாமலை.

  - படிவம் ( E-Form   )  

ஸ்ரீ குரு பகவான் அதிசார பெயர்ச்சி

ஹோமம் & சிறப்பு பூஜை